மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: ஆறு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: ஆறு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசு பள்ளி மாணவர்களை போன்று, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனதமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் கடந்தமுறை விசாரணையின்போது, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ”அரசு பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 10 சதவீதத்திற்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. அந்த அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கு இன்று(ஜூலை 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும். முதலில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை விசாரிக்கலாம் என்று கூறினார்.

இதையடுத்து, இவ்வழக்கில் விரிவாக வாதிட மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 26 ஜூலை 2021