மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

பேருந்து ஓட்டுநர்கள் செல்போனை நடத்துநரிடம் கொடுக்க வேண்டும்!

பேருந்து ஓட்டுநர்கள் செல்போனை நடத்துநரிடம் கொடுக்க வேண்டும்!

பணியின்போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போனை நடத்துநர்களிடம் கொடுத்து வைக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக் கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், பலரும் அதை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். அதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த விதிமுறை அனைவருக்குமே பொதுவானது என்றாலும், இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கும் அவ்வப்போது தனியாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பணியின்போது செல்போனை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் தங்களின் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும். தங்கள் பெயர், பணி எண் கொண்ட பேட்ஜை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. அதனால், செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்க வேண்டும். பணி முடிந்தபின்பு வாங்கி கொள்ள வேண்டும். இதை முறையாக கடைபிடிக்காமல் விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 26 ஜூலை 2021