மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் இட்லி!

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் இட்லி!

மற்ற உணவுகளைவிட ஆவியில் வேகவைத்த உணவுகள் வயிற்றுக்கு இதமாகவும், ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும் என்று இட்லியைச் சாப்பிடுபவர்கள் அநேகர். ‘அதற்காக தினமும் இட்லியா?’ என்று சலித்துக்கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் சலிப்பைப் போக்கும் விதத்தில் இந்த சத்தான வெஜிடபிள் இட்லி செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

என்ன தேவை?

இட்லி மாவு - 2 கப் அல்லது 3 கப்

கேரட் துருவல் – 5 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பீன்ஸ் - 5 டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த பச்சைப் பட்டாணி – 4 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கோஸ் – தலா 5 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஆறிய பிறகு மாவுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு

இந்த இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பப்பட்டால், காரச் சட்னியுடன் சுவைக்கலாம். காய்கறிகளை வதக்கிச் சேர்ப்பதால் இந்த இட்லி விரைவில் கெடாது.

நேற்றைய ஸ்பெஷல்: ஜாலி சமையல்!

.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 26 ஜூலை 2021