மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கடந்த மாதம் முதல் கட்டமாக 12,000 கன அடி நீரும், கடந்த 15ஆம் தேதி 21,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக நேற்று முன்தினம் 37,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் நேற்று (ஜூலை 24) தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக 7,000 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று 17,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்துக்கு நேற்று திறந்து விடப்பட்டுள்ள நீர் இன்று (ஜூலை 25) மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 25 ஜூலை 2021