மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஜாலி சமையல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஜாலி சமையல்!

சாப்பிடுவது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது என்னும்போது சமைப்பதும் அப்படித்தான். அதை ஒருவர் தலையில் மட்டுமே சுமத்துவது அநீதி.

இன்றைய நிலையில் சமூக வலைதளங்களில் விதவிதமான ரெசிப்பிகள் குவிந்துகிடக்கின்றன. அதிலிருந்து ஒன்றை உங்கள் கணவர், மகன், மகளுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அவர்களையே சமைக்கச் சொல்லலாம். அதற்கு இல்லத்தரசிகள் உதவலாம்.

காதல் செவ்வாய், அதிரடி வியாழன் என திரைப்படங்கள் வந்ததுபோல் மஷ்ரூம் மண்டே, ஃப்ரையிங் ஃப்ரைடே என ஒரு சார்ட் போட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீம் என்றால் சாப்பிடுபவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். அதுவே சமைக்கவும் உந்துதலாக இருக்கும்.

மேற்கத்திய நாடுகளைப் பார்த்து வேலன்ட்டைன்ஸ் டே கொண்டாடுகிறோம். டிவி சீரியல்கள் மறந்து வெப் சீரிஸ் பார்க்கிறோம். சாப்பாட்டில் மட்டும் என்ன கட்டுப்பாடு? லசானியா தொடங்கி பேகல் வரை சர்வதேச உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ளூர் விஷயங்கள் சேர்த்து நீங்களே ஒரு புது உணவை உருவாக்கலாம்.

சமைக்கும்போது பாடல் கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அது நீங்கள் செய்யும் சமையலுக்கு ஏற்ற இசையாக இருந்தால் எனர்ஜி ஏறும். உங்கள் மனநிலை மற்றும் சமையலுக்கு ஏற்ற பிளே லிஸ்ட் தயார் செய்யுங்கள். அதோடு சேர்ந்து சமைப்பது மகிழ்ச்சிதான்.

அப்பார்ட்மென்ட்வாசிகள் இதை முயற்சி செய்யலாம். ஒரே கிச்சனில் இரண்டு வீட்டுக்கான சமையல். ஒரு நாள் என் வீடு, இன்னொரு நாள் உங்கள் வீடென பிரித்துக் கொள்ளலாம். சமைத்த பின் ஒரே வீட்டில் சாப்பிட்டாலும், அவரவர் வீட்டுக்குக் கொண்டு சென்றாலும் சேர்ந்து சமைப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

சென்னை சத்யம் தியேட்டரில் ‘பிளைண்டு டேட்’ என ஒரு ஐடியா செய்தார்கள். என்ன படமென்றே தெரியாமல்தான் டிக்கெட் வாங்க வேண்டும். டைட்டில் கார்டு போடும்போதுதான் என்ன படமென்றே தெரியும். அது போல என்ன சமையல் என்ன குடும்பத்தினரிடம் சொல்லாமல் சர்ப்ரைஸாக செய்யுங்கள். அதுவும் அன்று நீங்கள் செய்து பார்க்க விரும்பும் எக்ஸ்பெரிமென்ட்டுகளைச் செய்து விடுங்கள். சுவை முன்ன பின்ன இருந்தாலும் சமைப்பதும் சாப்பிடுவதும் அன்று செம ஜாலியாக இருக்கும்.

சமூக வலைதளங்கள் இயங்குவதே லைக்ஸுக்காகத்தான். அந்த டெக்னிக்கை சமையலுக்குக் கொண்டு வருவோம். சாப்பிடுபவர்கள் ஒவ்வோர் உணவுக்கும் அவர்கள் கொடுக்க விரும்பும் லைக்ஸைக் கொடுக்கலாம். அந்த லைக்ஸ் முத்தமாக இருக்கலாம், பரிசாக இருக்கலாம் அல்லது ஏதேனும் உதவியாக இருக்கலாம். பூரி செம என்றால் சண்டே க்ளீனிங்கில் உங்கள் மகன் உதவுவான். தோசை ஆஸம் என்றால் மகள் முத்தம் தருவாள். முயன்று பாருங்கள். ஜாலி சமையல் தொடரட்டும்.

நேற்றைய ரெசிப்பி: உப்பு அடை!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 25 ஜூலை 2021