மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

மாணவர்கள் நீட் பயிற்சி பெறுவதை கண்காணிக்க வேண்டும்!

மாணவர்கள் நீட் பயிற்சி பெறுவதை கண்காணிக்க வேண்டும்!

நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொள்ளப்படுவதை பொறுப்பாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று(ஜூலை 23) பிறப்பித்த உத்தரவில்,”மாணவர் சேர்க்கை விவரம், பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களின் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற விவரங்களை சேகரித்து பராமரிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தை முறையாக பராமரித்து, மரக்கன்றுகள் நட்டும், புது வண்ணம் பூசியும் சீரமைக்க வேண்டும். கடந்த ஆண்டில் படித்த மாணவர்களின் விவரம், நடப்பு ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தை ஒப்பிட்டு விடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் வீட்டிலுள்ள தொலைக்காட்சி, மடிக்கணினி, செல்போன் குறித்த விவரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருக்க வேண்டும்.

இ-பாக்ஸ் மூலம் நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொள்ளப்படுவதை பொறுப்பாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தலைமையாசிரியர் வழங்க வேண்டும்.

நீட் தேர்விற்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்கள் போன்றவர்கள் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கூறிய மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து 28ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதல் அலகுத் தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட அலகுத் தேர்வு நடைமுறையே இந்தாண்டும் பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் அலகுத் தேர்விற்கு முழுமையாக தயாராகும்படி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

சனி 24 ஜூலை 2021