மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணி!

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணி!

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கெளரவம் குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றனர்.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும் இந்தத் தொடக்க விழாவில் கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம்வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் வருகை தந்தார். சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் தொடக்க விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.

முதலில் ஜப்பானின் தேசிய கீதம் பாடப்பட்டது. இதை ஜப்பானின் தற்காப்பு கலைஞர்கள் பாடினார்கள். விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து செல்ல தொடங்கினர். அணி வகுப்பில் ஜப்பானிய தேசியக் கொடி முதலில் கொண்டு வரப்பட்டது.

ஒலிம்பிக் தொடக்க விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கைத் தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது. அந்த நாட்டின் சார்பில் மொத்தம் 83 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அதை தொடர்ந்து ஒலிம்பிக் அகதிகள் குழு சென்றது. அவர்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, அயர்லாந்து, அஜர்பைஜான் அணிகள் சென்றன. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி சென்றது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அல்ஜீரிய அணிகள் சென்றன. அங்கோலோ, ஆப்பிரிக்கா, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவை அடுத்து இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட அணியான அன்டோரா சென்றது. அடுத்து ஏமனின் குழுவினர் சென்றனர்.

தொடர்ந்து இஸ்ரேல், இத்தாலி. ஈரான், அணிகள் சென்றன. அடுத்து மன்பிரீத் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி தேசிய கொடியை ஏந்தி சென்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் ஆறு அதிகாரிகள், 19 வீரர் - வீராங்கனைகள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 120-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 24 ஜூலை 2021