மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

கொப்பரை விலை வீழ்ச்சி: ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை!

கொப்பரை விலை வீழ்ச்சி: ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை!

கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கொப்பரை விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இளநீர், தேங்காய் மற்றும் கொப்பரை வாயிலாக வருமானம் ஈட்டுகின்றனர். தற்போது கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் இருந்ததைக் காட்டிலும் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

மத்திய அரசு கிலோவுக்கு ரூ.102-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆதார விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையுடன் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இளநீர் மற்றும் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள், “அரசு நிர்ணயித்துள்ள விலை கிடைக்காதபட்சத்தில் அரசே கொள்முதல் செய்யும். எந்த வகையிலும் கொப்பரை கொள்முதலில் நஷ்டம் ஏற்பட்டதில்லை.

தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கொப்பரை ரூ.150-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.102 மட்டும் கிடைக்கிறது. எனவே அரசு கொப்பரை விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.20 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 24 ஜூலை 2021