மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

இன்று முதல் நூலகங்களை திறக்க அனுமதி!

இன்று முதல் நூலகங்களை திறக்க அனுமதி!

தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களை இன்று முதல் திறக்க பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மால்கள், கடைகள்,அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று பொது நூலகங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இணையதள வசதி இருக்கும் இந்த காலத்திலும் நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கமுடையவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். குறிப்பாக, அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும்பாலும் பொது நூலகத்தையே அதிகம் பயன்படுத்துவார்கள்.

தமிழ்நாட்டில் பொது நூலக இயக்ககத்தின் கீழ் 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,962 கிளை நூலகங்கள், 1,821 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 3,779 நூலகங்கள் உள்ளன. இதுதவிர, 14 நடமாடும் நூலகங்கள், 780 பகுதிநேர நூலகங்களும் பயன்பாட்டில் உள்ளன. சென்னையில் மட்டுமே 153 நூலகங்கள் உள்ளன.

இந்த பொது நூலகங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி 75 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இன்று(ஜூலை 24) முதல் நூலகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், இன்று முதல் மக்கள் பொது நூலகத்தை பயன்படுத்தலாம். நூலகங்களில் வாசகர்கள் நேரடியாக நூல்களை எடுத்து பயன்படுத்த அனுமதி இல்லை. வாசகர்கள் கேட்கும் நூல்களை, நூலகப் பணியாளர்கள்தான் எடுத்து கொடுக்க வேண்டும். வாசகர்கள் எடுத்து வரும் சொந்த நூல்கள், மடிக்கணினி, மற்றும் இதர பொருட்களை, வேறு வாசகர்களுடன் பகிர அனுமதிக்க கூடாது.

65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர்களை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே வாசகர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. அந்த பகுதியிலிருந்து வரும் யாருக்கும் நூலகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 24 ஜூலை 2021