மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

உபி-யில் ஜீன்ஸ் அணிந்த பெண்ணை அடித்து கொன்ற உறவினர்கள்!

உபி-யில் ஜீன்ஸ் அணிந்த பெண்ணை அடித்து கொன்ற உறவினர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த பெண்ணை உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.

லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்கள். அப்போது அந்தப் பெண் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.

லூதியானாவில் தங்கி இருந்தபோது அவர் ஜீன்ஸை அணிய தொடங்கினார். அது அவருக்குப் பிடித்து இருந்ததால் கிராமத்துக்குச் சென்ற பிறகும் ஜீன்ஸை அணிந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த், அவர் மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும், இந்திய உடைகளைதான் அணிய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், அவள் மறுத்து விட்டாள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார்கள்.

அந்தப் பெண்ணை சுவரில் மோதியும், அடித்து உதைத்தும் சாகடித்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்குக் கீழே வீசிவிட்டு சென்றனர்.

அந்தப் பெண் பிணமாகக் கிடப்பதை பார்த்த சிலர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்தப் பெண்ணை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர். அவளைக் கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், உத்தரகாண்டின் முதல்வர் தீரத் சிங் ராவத், கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சமுதாயத்துக்கு ஒரு மோசமான முன்மாதிரி என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 23 ஜூலை 2021