மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ஒலிம்பிக்கில் கொரோனா பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு

ஒலிம்பிக்கில் கொரோனா பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு

ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று (ஜூலை 23) தொடங்க உள்ள நிலையில் 10 பேருக்கு நேற்று (ஜூலை 22) ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பது என்பது முடியாத காரியம்.

விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்றவர்,

“உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில் 75 சதவிகிதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள டோக்கியோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வந்து இருக்கும் வீரர், வீராங்கனை குழுவைச் சேர்ந்தவர்களில் ஒருவர் உள்பட மேலும் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பு குழுவினர் நேற்று தெரிவித்தனர். இதன் மூலம் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே டோக்கியோவில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு கொரோனா அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,832 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

-ராஜ்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 23 ஜூலை 2021