மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

கொரோனா: பராமரிப்பாளர்களை இழந்து தவிக்கும் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள்!

கொரோனா: பராமரிப்பாளர்களை இழந்து தவிக்கும் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள்!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் தங்கள் பராமரிப்பாளர்களை 21 நாடுகளில் 15 லட்சம் குழந்தைகள் இழந்து தவிக்கிறார்கள். அவர்களில் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள் அடங்குவர் என்று தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய நிறுவனம் (நிடா) அளித்த ஆய்வின் தகவல்கள் ‘தி லேன்செட்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் தங்கள் பராமரிப்பாளர்களை 21 நாடுகளில் 15 லட்சம் குழந்தைகள் இழந்து தவிக்கிறார்கள். அதில் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்களை கொரோனாவுக்கு பறி கொடுத்து பரிதவிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் மட்டுமே 25,500 குழந்தைகள் தங்கள் தாயை கொரோனாவால் இழந்துள்ளனர். 90,751 குழந்தைகள் தங்கள் தந்தையைப் பறிகொடுத்துள்ளனர். 2,898 இந்திய குழந்தைகள் தங்களை கவனித்து வந்த தாத்தா பாட்டிகளில் ஒருவரை இழந்திருக்கிறார்கள். 9 குழந்தைகள் தங்களை பராமரித்து வந்த தாத்தா பாட்டி என இருவரையும் இழந்து விட்டனர்” என்று கூறியுள்ள அந்த ஆய்வு...

மேலும், “தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோரையோ, தாத்தா பாட்டியையோ இழந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 1,000 குழந்தைகளில் 0.5 பேர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். ஆனால், இதுவே தென் ஆப்பிரிக்காவில் 6.4, பெருவில் 14,1, பிரேசிலில் 3.5, கொலம்பியாவில் 3.4, மெக்சிகோவில் 5.1, ரஷியாவில் 2.0, அமெரிக்காவில் 1.8 என்ற அளவில் உள்ளது” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 23 ஜூலை 2021