மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: ட்ரை ஃப்ரூட் சிக்கி!

ரிலாக்ஸ் டைம்: ட்ரை ஃப்ரூட் சிக்கி!

பாதாம், பிஸ்தா, வால்நட், திராட்சை, பேரீச்சை என ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை தினமும் சிறிதளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், தொடர்ந்து செய்வதில்தான் பலருக்கும் அலுப்பு. வெறும் ட்ரை ஃப்ரூட்ஸாகவோ, நட்ஸாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் அவற்றை சுவையான ரெசிப்பியாக மாற்றி ருசிக்கலாம்.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு உருக்கி, ஒரு கப் பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பொடியாக நறுக்கிய பாதாம் கால் கப், முந்திரி கால் கப், வேர்க்கடலை கால் கப், வறுத்த வெள்ளை எள் கால் கப் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாகத் தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கி, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

சிறப்பு

சத்துகளின் சங்கமமான இந்த சிக்கி அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது. புத்துணர்ச்சி தருவது.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 23 ஜூலை 2021