மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: துள்ளு மாவு!

கிச்சன் கீர்த்தனா: துள்ளு மாவு!

ஆடி என்றாலே அம்மனின் மாதம் என்று சொல்வார்கள். அம்பிகையின் பூப்பெய்தல், திருமணத் தபசு, வளைகாப்பு என அனைத்து வைபோகங்களும் நடைபெறும் மாதம் ஆடி. சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் புண்ணிய தட்சிணாயனக் காலம் தொடங்குவது ஆடியில்தான். ஆடி மாதம் கூழ் ஊற்றும் வைபவத்தில் இந்த துள்ளு மாவும் இடம்பெறும். கூழ் ஊற்றுவதற்கு முன்பு இதை எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம்.

என்ன தேவை?

வெல்லம் - ஒரு கப்

பச்சரிசி - 2 கப்

வறுத்த பாசிப் பயறு (பச்சைப் பயறு) மாவு - அரை கப்

வடித்த சோறு - 2 கப்

எப்படிச் செய்வது?

பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். உரலில் இடித்தால் இன்னும் சிறப்பு. வெல்லத்தைப் பொடித்து பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கலக்கிக் கிளறவும்.

இதோடு வறுத்த பாசிப் பயறு மாவையும் சில ஊர்களில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் துள்ளு மாவு. அழுத்திக் கொழுக்கட்டைபோல பிடிக்கப்பட்ட சோற்று உருண்டையை, இந்தத் துள்ளு மாவில் ஒருமுறை புரட்டியெடுக்கவும். ஒரு முறத்தில் வேப்பிலைகளை வைத்து, அதன் மீது இந்த உருண்டைகளை வைத்து அம்மனுக்குப் படைத்து அனைவரும் உண்ணலாம்.

நேற்றைய ரெசிப்பி: முருங்கைக்கீரை பிரட்டல்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வெள்ளி 23 ஜூலை 2021