மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

ஸ்டாக் வைக்க வேண்டாம்: டாஸ்மாக்கிற்கு உத்தரவு!

ஸ்டாக் வைக்க வேண்டாம்: டாஸ்மாக்கிற்கு உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் 90 நாட்களுக்கு மேல் மதுபானங்களை இருப்பு வைக்கக் கூடாது என்றும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வாய்ழொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும், சில உத்தரவுகளையும்வழங்கினார்.

கூட்டத்தில்பேசிய மேலாண் இயக்குநர் சுப்பிரமணியன், மதுபான கிடங்குகளிலும்,கடைகளிலும் 90நாட்களுக்கு மேல் மதுபானங்களை வைக்கக் கூடாது. அவைகளை உடனடியாக விற்பனை செய்யவேண்டும். அதேசமயம் குறிப்பிட்ட மதுபானங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துவிற்பனை செய்யக் கூடாது. அனைத்துவிதமான மதுபானங்களையும் விற்பனை செய்ய வேண்டும்.

கூடுதல்விலைக்கு மதுபானங்களை விற்பதாக புகார்கள் வருகின்றன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

கடைகளை திறப்பதற்கு முன்பு மேற்பார்வையாளர் உள்பட யாரெல்லாம் கடையில்உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலாண்மைஇயக்குநர் உத்தரவின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்க கூடாது. கடைகளில்வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது. சில மாவட்ட மேலாளர்கள் மீது அதிகளவில் புகார்வருகின்றன. இது தொடர்ந்தால்,  நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதால், எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 21 ஜூலை 2021