மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

ஓபிசி பிரிவினருக்கான சாதி சான்று : அரசின் உத்தரவு!

ஓபிசி பிரிவினருக்கான சாதி சான்று :  அரசின் உத்தரவு!

தமிழ்நாட்டில் ஓபிசி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்க ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இந்திய அரசுப்பணி மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த பிரிவினருக்கான சாதி சான்றிதழை வழங்கும்போது ஊதியம், வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும், அது முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், சாதி சான்றிதழை பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், இந்திய அரசின் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதனால் இதுகுறித்து மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருந்தாலும், ஓபிசி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருவாயை கணக்கில் கொள்ள தேவையில்லை. காலதாமதமின்றி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 20 ஜூலை 2021