மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ லஸ்ஸி!

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ லஸ்ஸி!

பொதுவாக மாம்பழம் கனிமங்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து லஸ்ஸி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தயிர் எப்போதுமே அதன் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்பட்ட ஒரு உணவு பொருள். நல்ல செரிமானம், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான தோல் மற்றும் பலவற்றை ஊக்குவிக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுகள் தயிரில் இடம்பெற்றுள்ளன.

எப்படிச் செய்வது?

புளிக்காத தயிர் நான்கு கப், தித்திப்பான மாம்பழக்கூழ் ஒரு கப், சர்க்கரை அரை கப், தண்ணீர் ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடித்த ஐஸ் துண்டுகள், ஒரு சிட்டிகை ஃபுட் கலர், சில துளிகள் மேங்கோ எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கும் முன் பொடித்த முந்திரி, தயிர் ஏடு.சேர்த்துக் கொள்ளவும்.

சிறப்பு

இந்த மாம்பழ லஸ்ஸியில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், நீரிழப்பைத் தடுக்கவும் உடலில் நீர் சமநிலை நிர்வகிக்கவும் உதவும். இதில் ஃபோலேட், இரும்பு, கால்சியம், துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்க உதவும்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 20 ஜூலை 2021