மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: ஔவையார் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: ஔவையார் கொழுக்கட்டை

திருமணமாகாத பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம், ஔவையார் விரதம். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசிய நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக்கூட அங்கே அனுமதியில்லை. ஔவையார் விரதத்தின் முக்கிய நைவேத்தியமான உப்பில்லா கொழுக்கட்டையை பெண்கள் உண்டால், அந்த வீட்டு ஆண்களுக்கு நன்மை விளையும் என்பது நம்பிக்கை.

என்ன தேவை?

பச்சரிசி - அரை கிலோ

வெந்நீர் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசியைக் கழுவி களைந்து நிழலில் உலரவைத்து உரலில் இடித்தோ, மிக்ஸியில் அரைத்தோ நைஸான மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவில் வெந்நீரைச் சேர்த்து சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துப் படைக்கலாம். மேலும், கொழுக்கட்டை மாவில் ஒரு விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள்.

குறிப்பு:

கைக்குத்தல் பச்சரிசியும் தேங்காயும் மட்டுமே இந்த விரதத்தில் முக்கியப் பொருட்கள். வேறு எந்தப் பலகாரமும் உண்ணக் கூடாது. வழிபாட்டுக்குப் பிறகு விடிய விடியக் கதைகளும் பாடல்களும் பெண்களுக்கிடையே தொடர்ந்து நடக்கும். இரவெல்லாம் பாடியும் கதை சொல்லியும் மகிழ்ந்திருக்கும் பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கே வழிபாடு செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் சுத்தம் செய்வார்கள்.

நேற்றைய ரெசிப்பி: பானகம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 20 ஜூலை 2021