மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

10,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க முடிவு: எந்த மாநிலம்?

10,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க முடிவு: எந்த மாநிலம்?

ஒடிசா மாநிலத்தில் ஜூலை 26ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

புதுச்சேரியில் ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த முடிவை கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டிலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பள்ளிகளை படிப்படியாகத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 17) ஒடிசா மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூலை 26ஆம் தேதி முதல் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், பள்ளிக்கு வருவதும், வராமல் இருப்பதும் மாணவர்களின் விருப்பம். பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படும்.

நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அரசு விடுமுறைகளில் பள்ளி திறக்கப்படாது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து இறுதி முடிவு செய்து, மீண்டும் மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுப்பார்கள்.

அதுபோன்று, 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதலும் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 18 ஜூலை 2021