மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

கப்பல் மோதி மூழ்கிய படகு: தத்தளித்த மீனவர்கள்!

கப்பல் மோதி மூழ்கிய படகு: தத்தளித்த மீனவர்கள்!

சென்னை அருகே கடலில் கப்பல் மோதி தத்தளித்த மீனவர்களை காசிமேடு மீனவர்கள் மீட்டனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று இரவு, 1.30 மணியளவில் 7 மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். 5 நாட்களுக்குக் கடலில் தங்கி மீன் பிடிக்கும் வகையில், உணவு, டீசல் எனத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர்.

காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலிலிருந்தபோது, அங்கு வந்த கப்பல் ஒன்று மீனவர்களின் படகில் மோதியது. இதன் காரணமாகப் படகு கடலில் கவிந்தது. மீனவர்களும் கடலில் விழுந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் தத்தளித்தனர். கடலில் தத்தளித்த நிலையில், வயர்லெஸ் கருவி மூலம் காசிமேட்டில் உள்ள மீனவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காசிமேட்டிலிருந்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த ஹரி, மணி, கோபால், லோகு, ராஜவேலு, ரஞ்சித், அஜித் ஆகிய 7 பேரை மீட்டு இன்று காலை 6 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்த 7 பேர் சென்ற படகின் விலை 30 லட்சம் என்றும் அவர்கள் எடுத்துச் சென்ற 11 வலைகளும் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மீனவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்தவர் சர்ஜுன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, நேற்று மாலை கரை திரும்பிக்கொண்டிருந்தனர். தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ராட்சத அலை எழுந்து படகு மீது மோதியது. இதனால் படகு கவிழ்ந்ததில், அனைத்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அங்கே மற்றொரு படகில் வந்த மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

இதில், மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி பிரிட்டன் ராஜா(32), கரை வருவதற்குள் உயிரிழந்தார்.

-பிரியா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 18 ஜூலை 2021