மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: வாங்க பரோட்டா சாப்பிடலாம்!

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: வாங்க பரோட்டா சாப்பிடலாம்!

பிரியாணிக்கு தால்சாதான் சரின்னு ஆரம்பிச்சு பழைய சோத்துக்கு பக்குவமான வெஞ்சனம் மாதிரி பரோட்டாவுக்கு சால்னாதான் பெஸ்ட் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

பிரியாணிக்கு அடுத்து மக்கள் விரும்பி சாப்பிடறது பரோட்டா சால்னா. பொரிச்ச பரோட்டா, பஞ்சு பரோட்டா, காயின் பரோட்டா, பன் பரோட்டா, மலபார் பரோட்டான்னு ஏகப்பட்ட வெரைட்டி இருந்தாலும், பரோட்டாவின் சுவையை ஒருபடி மேல தூக்கிவிடறது சால்னாதான். பரோட்டா சாப்பிடறதுக்குன்னு விதிமுறைகள் இருக்கு.

முதலில், பரோட்டாவைக் கல்லிலிருந்து சூடா எடுத்து மூன்று நான்கு பரோட்டாக்களை ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி, சைட்ல ரெண்டு தட்டு, லைட்டா சுழற்றி, இன்னும் ரெண்டு தட்டு, அப்படியே துணிய கல்லுல துவைக்கிற மாதிரி நாலு அடி. அப்படியே லேயர் லேயரா பிரிஞ்சு நிக்கணும்.

அடுத்து, பரோட்டாவை, கிழிச்சோ/நொறுக்கியோ ரெண்டு கரண்டி சால்னாவை மேலாக விளாவி விட்டு, இரண்டு மூணு நிமிஷம் ஊற வெச்சு சாப்பிட்டா ஆஹா...பேஷ் பேஷ்!

‘நான் டீசன்ஸி பார்க்கிற ஆளு. இப்படி பிச்சுப்போடறதெல்லாம் சரிபட்டு வராது'ன்னு நினைச்சீங்கன்னா, பரோட்டாவோட மட்டன் சுக்காவோ, சிக்கன் ரோஸ்ட்டோ சொல்லிடுங்க. பரோட்டாவை கொஞ்சம் பிச்சு, அதுல கொஞ்சம் சுக்கா/ரோஸ்ட்டை அள்ளி, சால்னால ரெண்டு முக்கு முக்கி உள்ளே தள்ளுங்க. சால்னாலதான் பாதி சூட்சுமம் இருக்கு. மிதமான திக்னெஸ்ல தேங்காய் அரைச்சுவிட்டு சோம்பும் பட்டையும் மணக்கும் சால்னாக்கள் தேவாமிர்தம்.

மதுரை, விருதுநகர் எனத் தென்தமிழகம் சால்னா தலைநகரங்கள். சிறந்த சால்னாவாக இருப்பின் இரண்டு பரோட்டக்களை எக்ஸ்ட்ராவாக உள்ளே தள்ளுவதில் தப்பேதுமில்லை. உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி ரெண்டு பரோட்டாவோ, நாலு பரோட்டாவோ சாப்பிட்டு ஆப்- பாயில் ஒண்ணை உள்ளே தள்ளி பாருங்க... பாதி சொர்க்கம் தெரியும்.

நேற்றைய ரெசிப்பி: மாங்கொட்டை ரசம்!

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

ஞாயிறு 18 ஜூலை 2021