மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஜூலை 2021

ரூ.75,000 கோடி ஜிஎஸ்டி வரி இழப்பீடு: தமிழகத்துக்கு எவ்வளவு?

ரூ.75,000 கோடி ஜிஎஸ்டி வரி இழப்பீடு: தமிழகத்துக்கு எவ்வளவு?

ஜிஎஸ்டி வரி இழப்பீடாக தற்போது வழங்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாயில், அதிகபட்சமாக, கர்நாடகம் மாநிலத்துக்கு ரூ.8,542 கோடியும் மகாராஷ்டிராவுக்கு ரூ.6,501 கோடியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு குறைந்த அளவு தொகையே வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது. இந்தப் புதிய வரி அமைப்பின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி ஒவ்வோர் ஆண்டும் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. நடப்பு 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.2.59 லட்சம் கோடியை மாநில அரசுகளுக்கு வழங்க, கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதித் தொகுப்பில் போதுமான நிதி இல்லாத காரணத்தால், ரூ.1 லட்சம் கோடியை மட்டும் ஜிஎஸ்டி வருவாயிலிருந்தும், மீதமுள்ள ரூ.1.59 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாக வாங்கி, அதை மாநிலங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல் தவணையாக ரூ.75,000 கோடியை கடனாகப் பெற்று, அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.84,000 கோடியை நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.75,000 கோடியில், அதிகபட்சமாக, கர்நாடகம் மாநிலத்துக்கு ரூ.8,542 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.6,501 கோடியும், குஜராத் மாநிலத்துக்கு ரூ.6,151 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.3,818 கோடியும், கேரளத்துக்கு ரூ.4,122 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.517 கோடியும் வழக்கப்பட்டிருக்கிறது.

இதே போல கடந்த 2020-2021ஆம் நிதி ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாகப் பெற்று, மாநில அரசுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 17 ஜூலை 2021