மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

விருதுகள் - தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்!

விருதுகள் - தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வழங்கப்படும் ஏழு விருதுகளுக்கு விண்ணப்பம் அனுப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி வரும் திருவள்ளுவர் விழாவில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கி, பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 16 ஜூலை 2021