மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்பு பயிர்களை ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் குளிர் நிறைந்த பகுதிகளான ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரட், பீட்ரூட், டர்னிப், உருளைக்கிழங்கு போன்ற மலைக் காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். அதேபோல் மித வெப்பமான காலநிலை நிலவும் மலைச் சரிவு பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தப் பயிர்களின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்புப் பயிர்களை ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் செலவினங்களைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் 2021-22ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின்கீழ் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ் பல நறுமணப் பயிர்களான மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 125 ஹெக்டேருக்கு மானியம் வழங்க நீலகிரி மாவட்டத்துக்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் பயனடையலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான தொடர்பு எண்ணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஊட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் 8489604087, குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 6381963018, கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9994749166 மற்றும் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 8903447744 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்தும் உழவன் செயலியில் பெயரை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 16 ஜூலை 2021