மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

புதிய கார்டுகள் வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு தடை!

புதிய கார்டுகள் வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு தடை!

புதிதாக யாருக்கும் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு ஆகியவற்றை வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

மாஸ்டர்கார்டு, விசா உள்ளிட்ட நிறுவனங்கள், பல்வேறு வங்கிகளுக்கான ஏடிஎம், கிரெடிட், பிரீபெய்டு கார்டுகளை வழங்கி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் சேகரித்த தகவல்கள், பணப் பரிமாற்ற விவரங்களை இந்தியாவில் மட்டுமே சேகரித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு மாஸ்டர்கார்டு நிறுவனம் உடன்படவில்லை.

இதையடுத்து, புதிதாக யாருக்கும் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு ஆகியவற்றை வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்த தடை, வருகிற 22ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஆனால், பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 16 ஜூலை 2021