மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

பிளஸ் 2 தேர்வு முடிவு: ரிசல்ட் பார்ப்பது எப்படி?

பிளஸ் 2  தேர்வு முடிவு: ரிசல்ட் பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில், ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நேற்று (ஜூலை 16) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. முதல்வர் எந்த தேதியில் சொல்கிறாரோ அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்~ என்று தெரிவித்தார்.

அதேசமயம், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அவசியம் என்பதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஜூலை 19 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், '', 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைக் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

1. www.tnresults.nic.in

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

4. www.dge.tn.gov.in

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலைத் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 16 ஜூலை 2021