மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கொரோனா தீவிரமடைந்ததையடுத்து,சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கேரளாவில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் நாளை ஆடி மாத பிறப்பையொட்டி இன்று(ஜூலை 16) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் திறந்து வைத்தார். இதையடுத்து, மாதாந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஜூலை 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் என்ற அளவில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அல்லது தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும். இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நிலக்கல்லில் 2 டாக்டர்கள், ஒரு செவிலியர், உதவியாளர், உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழு உள்ளது. யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யாதவர்கள் மற்றும் காலாவதியான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அங்கே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

இதுவரை தரிசனம் செய்வதற்காக 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 9000க்கும் மேற்பட்ட தரிசன டிக்கெட்டுகள் இன்னும் முன்பதிவு செய்யபடாமல் உள்ளன என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் ஆரோக்கியமான யாத்திரையை உறுதிசெய்ய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 16 ஜூலை 2021