மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

மனநோய்க்கு ஆளாகும் மாணவர்கள்: தனியார் பள்ளி கூட்டமைப்பு!

மனநோய்க்கு ஆளாகும் மாணவர்கள்: தனியார் பள்ளி கூட்டமைப்பு!

இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்கள் மனநோய்க்கு ஆளாகின்றனர். அதனால், படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று(ஜூலை 16) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 1 கோடியே 2 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் பி.டி.அரசகுமார் , “தமிழ்நாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் சார்பாக கொரோனா காலத்தில் அயராது உழைக்கும் முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மற்ற பள்ளிகளில் சேர்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மனநோய்க்கு ஆளாகியுள்ளனர். எனவே, படிப்படியாக பள்ளிகளை பகுதி நேரமாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண முறைகேடுகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை நிர்ணயிக்க கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம்” என்று கூறினார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்லூரிகளை திறந்தால் ஏற்படும் சாதகம், பாதகங்கள் குறித்தும், 9, 10,11,12 ஆகிய வகுப்புகளை முதல் கட்டமாக திறக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்று மாலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 16 ஜூலை 2021