மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்!

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1998 முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டம் 2003ஆண்டுக்கு பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்(CPS) அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், 1998 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தையே அனைவருக்கும் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து கழக ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர போக்குவரத்து துணை செயலாளர் மற்றும் நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இதற்கான தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு கிடைக்க பெற்ற பின், இதுகுறித்து ஆராய்ந்து, முதல்வரிடம் ஆலோசனை நடத்தி,நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 16 ஜூலை 2021