மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

இந்தியாவைத் திரும்பி பார்க்கவைத்த ஐந்து சகோதரிகள்!

இந்தியாவைத் திரும்பி பார்க்கவைத்த ஐந்து சகோதரிகள்!

ராஜஸ்தானில் விவசாயியின் மூன்று மகள்கள் ஒரே நேரத்தில் மாநில நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சஹ்தேவ் சஹாரன் என்ற விவசாயிக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள்களான ரோமா மற்றும் மஞ்சு ஆகிய இருவரும் ஏற்கனவே, ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்று பணியில் உள்ளனர். மற்ற அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகிய மூன்று மகள்களும் 2018ஆம் ஆண்டு மாநில நிர்வாக சேவை தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (RPSC) ராஜஸ்தான் நிர்வாக சேவை (RAS) 2018 தேர்வின் இறுதி முடிவை நேற்று (ஜூலை 15) வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருமே வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் மாநில நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணியாற்ற இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்வில் வெற்றி பெற்ற மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டு மழை குவிந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில், “இது ஒரு நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் ஒன்றாக ஆர்ஏஎஸ்ஸில் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்ஏஎஸ் அதிகாரிகள்" என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் 6,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

தற்போது இருக்கிற சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவராவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவு அனைவரிடமே இருக்கிறது. இந்த நிலையில், விவசாயி ஒருவரின் ஐந்து மகள்களும், மாநில நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று, அதுவும் உயர்ந்த பதவிகளில் பணியாற்ற இருப்பது மிகவும் பெருமையான விஷயமாகும்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 16 ஜூலை 2021