மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

வாளியுடன் சென்று நீதிமன்றத்தைத் தூய்மைப்படுத்துவேன்: தலைமை நீதிபதி!

வாளியுடன் சென்று நீதிமன்றத்தைத் தூய்மைப்படுத்துவேன்: தலைமை நீதிபதி!

ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் சென்று நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்துவேன் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 14) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், 'மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடிவதில்லை. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலையில் இருக்கிறது. நீதிமன்ற வளாகத்தைத் தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றி பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி தரப்பில், '19 தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, "நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதை நானும் கவனித்தேன். அதனால், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நானே நேரடியாக ஒரு வாளி, துப்புரவு உபகரணங்களுடன் வந்து நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்த உள்ளேன்.

இந்தப் பணிக்கு என்னுடன் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றப் பணியாளர்களும் இணைந்து வந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 15 ஜூலை 2021