மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

5 லட்சம் கி.மீ பயணம், 24 வருட தேடல்; காணாமல் போன மகனைக் கண்ட தந்தை!

5 லட்சம் கி.மீ பயணம், 24 வருட தேடல்; காணாமல் போன மகனைக் கண்ட தந்தை!

சீனாவைச் சேர்ந்த குவோ கேங்டாங் என்கிறவர் ஐந்து லட்சம் கி.மீ தொலைவு மோட்டார் பைக்கிலேயே பயணம் செய்து, 24 வருடங்களாகக் காணாமல் போயிருந்த தன் மகனைக் கண்டடைந்துள்ளார்.

சீனாவில் உள்ள கிழக்கு ஷாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் குவோ கேங்டாங். இவர் மகனுக்கு அப்போது இரண்டரை வயது. வீட்டு வாசலுக்கு வெளியே அச்சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவன் கடத்தப்பட, நிலைகுலைந்து போனது அவரின் குடும்பம்.

கடத்தல்காரர்கள் குழந்தையைக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் குழந்தையை மத்திய சீனாவில் உள்ள ஒரு குடும்பத்திடம் விற்றிருக்கின்றனர். ஆனால், இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் குழந்தையின் தந்தை காவல்துறையிடம் புகார் கொடுத்ததோடு பிள்ளையைத் தேடி வருடக்கணக்கில் அலைந்திருக்கிறார்.

தன் குழந்தை கடத்தப்பட்ட சிறிது நாள்களிலேயே கேங்டாங் அதுவரை பார்த்து வந்த தனது வேலையை உதறியிருக்கிறார். ஒரு பெரிய கொடியில், கடத்தப்பட்ட தன் குழந்தையின் புகைப்படத்தைப் பதித்து, அதைத் தனது மோட்டார் பைக்கின் பின்னால் கட்டி, அந்த பைக்கிலேயே தனது மகனைத் தேடி நாடு முழுக்க அலைந்திருக்கிறார்.

கடந்த 24 வருடங்களில் தன் மகனைத் தேடி ஐந்து லட்சம் கி.மீ பயணம் செய்திருக்கும் இவர், பயணத்தின்போது பாலங்களின் அடியில் உறங்குவது, வழிப்பறிக் கொள்ளையர்களின் தொந்தரவுகளைச் சமாளிப்பது என்று பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறார். மகனைத் தேடும் பயணத்தில் கடும் பணத்தட்டுப்பாடு காரணமாக பிச்சைகூட எடுத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் சீனாவில் உள்ள மத்திய ஹீனான் மாகாணத்தில் வசிக்கும் 26 வயது ஆசிரியர் ஒருவரின் டிஎன்ஏ மூலக்கூறுகள், குவோ கேங்டாங்கின் டிஎன்ஏ மூலக்கூறுகளுடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்த சீன காவல்துறை, இதுகுறித்து கேங்டாங்குக்குத் தகவல் கொடுத்திருக்கிறது.

அங்கு சென்ற அவர், பிள்ளையைக் கண்டவுடன் அவனைக் கட்டியணைத்து கண்ணீர்விட்ட காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது

இந்த 24 வருடங்களில் காணாமல் போன தன் மகனைத் தேடியதோடு மட்டுமல்லாமல், தன்னைப்போல குழந்தையைத் தொலைத்த குடும்பங்களுக்கு உதவுவது, குழந்தைக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று தனது துயரத்துக்கும் இடையிலும் மனிதம் நிறைந்த மனிதராக வலம் வந்திருக்கிறார் கேங்டாங்.

ராஜ்

,

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 15 ஜூலை 2021