மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

ஷட்டர் பழுது - வீணாகும் நீர்: விவசாயிகள் கவலை!

ஷட்டர் பழுது - வீணாகும் நீர்: விவசாயிகள் கவலை!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மதகின் ஷட்டர் சேதமடைந்து இருப்பதால் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதனால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பெரியகுளம் கண்மாய், விராக சமுத்திரம் கண்மாய், பூரிப்பாறைகுளம், புங்கங்குளம், குணவந்தநேரி, பாதரங்குளம், வில்லவராயன்குளம் உட்பட 40 கண்மாய்கள் உள்ளன. இந்த நிலையில் கூமாப்பட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாயை நம்பி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பெய்த தொடர்மழையினால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், ஆறுகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கண்மாய்களும் நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாய்க்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாயில் ஓரளவுக்கு நீர் உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தக் கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த கண்மாயில் உள்ள மதகின் ஷட்டர் பழுதாகியுள்ளது.

இதனால் இந்த கண்மாயில் இருக்கிற நீர் தொடர்ச்சியாக வெளியேறி வீணாகிச் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள மதகுகளை சீரமைத்து தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் அந்தப் பகுதியிலுள்ளா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 15 ஜூலை 2021