மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

மெரினாவை பராமரிக்க ஏன் குழு அமைக்க கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி!

மெரினாவை பராமரிக்க ஏன் குழு அமைக்க கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி!

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அலுவலர் தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு இன்று(ஜூலை 15) நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை. அதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலரையும், சென்னை மாநகர காவல் ஆணையரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளன?

கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்குப் பிறகும் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக் கூடாது? என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

மெரினாவின் அழகை பாதுகாக்க மாநகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அலுவலர் தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு ஏன் அமைக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 15 ஜூலை 2021