மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்!

ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்!

தமிழ்நாட்டில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கான வாடகையை பொதுமக்களிடம் வசூலிப்பதாகவும், அதனால் ரேஷன் கடைகளுக்கு அரசு சொந்த கட்டடம் கட்டி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை 14) திருநெல்வேலியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வாடகை கட்டடங்களில் இயங்கக் கூடிய ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் 6,970 ரேஷன் கடைகள் தனியார் கட்டடங்களில் வாடகையில் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு அரசு கட்டடங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு கட்டடங்கள் கட்ட ஏதுவான இடங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு அவ்விடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்றம் தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற நிதிகள் மூலம் ரேஷன் கடை கட்டடங்களை கட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 15 ஜூலை 2021