மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி கிடையாது!

பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி கிடையாது!

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என எச்சரிக்கை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், சாலையில் பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் இந்தக் கண்ணாடிகள் இருப்பதில்லை. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 15) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தேவைப்பட்டால், இதுசம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம்” என்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 15 ஜூலை 2021