மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: மாம்பழ புளிசேரி

கிச்சன் கீர்த்தனா: மாம்பழ புளிசேரி

புளிப்போ, இனிப்போ மாம்பழத்தின் அதீத சுவைக்கு மயங்காதவர்கள் நம்மில் யாருமில்லை. மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதம் என்றால், அதை சமையலில் பயன்படுத்தி சாப்பிடுபவர்களும் உண்டு. கேரள மாநில ஸ்பெஷலான இந்த மாம்பழ புளிசேரி வித்தியாசமான சுவையைக் கொண்டது. சாதாரண நாளை சிறப்பு நாளாக்கும் தன்மையுடையது.

என்ன தேவை?

மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்

பழுத்த மாம்பழம் – 5 (தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்)

பச்சை மிளகாய் – 8

தேங்காய்த் துருவல் – முக்கால் கப்

மோர் – ஒரு கப்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், மாம்பழத் துண்டுகள், மோர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். மாங்காய் நன்கு வெந்த பிறகு மிளகுத்தூள், அரைத்த விழுது சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும்போதே இறக்கவும் (கொதிக்க வைக்கக் கூடாது). சிறிதளவு எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துச் சேர்க்கவும். சாதத்துடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி : மாம்பழ ஜாம்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

வியாழன் 15 ஜூலை 2021