மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய இந்தியப் பிரதமர்!

ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய இந்தியப் பிரதமர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள், அவர்களின் பெற்றோருடன் பிரதமர் மோடி நேற்று (ஜூலை 13) மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் வருகிற 17ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து ஜப்பான் புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீரர் வீராங்கனைகளுடன் பாரத பிரதமர் மோடி உரையாடினார். அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் பிரதமர் மோடி, “பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

அதற்குப் பதிலளித்த தீபிகா குமாரி, ‘‘தொடக்கத்தில் இருந்து எனது பயணம் சிறப்பாக சிறப்பாக உள்ளது. மூங்கிலில் அம்பு செய்து தொடங்கினேன். அதன்பின் படிப்படியாக நவீன அம்புக்கு மாறினேன்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களான உங்களுக்காக நாடு முழுவதும் மக்கள் மிகவும் எழுச்சியுடன் உற்சாகத்தையும், ‘நமோ ஆப்’ மூலம் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு , குறிக்கோள், அனைத்தும் உள்ளது. உங்களின் நற்பண்புகள் புதிய இந்தியாவுக்கு வழிகாட்டும். பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையோடு நாடு உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள். ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு உங்களுக்கு தேவையான உதவிகளை விளையாட்டு அமைச்சகம் மூலம் செய்து வருகிறது. நாடு உங்களுடன் துணை நிற்கிறது” என்று பேசினார்.

தொடர்ந்து காணொலியில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், “இங்குள்ள பயிற்சியாளர் ஸ்டாஃப்கள், சப்போர்ட் ஸ்டாப்ஃகள் உள்ள அதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நமது வீரர்களுடன் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். வீரர்களுக்கு உதவி செய்வதில் இருந்து ஒருபோதும் அரசு தவறாது” என்றார்.

ராஜ்

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

புதன் 14 ஜூலை 2021