மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

ஆண்டில் 300 நாட்கள் தூங்கும் விநோத மனிதர்!

ஆண்டில் 300 நாட்கள் தூங்கும் விநோத மனிதர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயது புர்காராம் வருடத்தின் மொத்த நாட்களில் 300 நாட்களைத் தூங்கியே கழித்துக்கொண்டிருக்கிறார்.

பழக்கடையை நடத்தி வரும் இவருக்கு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது அதீத தூக்கம். ஆரம்பத்தில் ஒரு நாள், இரண்டு நாட்கள் பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது தூக்கம், ஒரு மாதத்துக்கு 25 நாட்கள் எனத் தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றுள்ளது. இதனால், மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தன்னுடைய பழக்கடையை திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் புர்காராம்.

தனது கணவனின் விநோதமான தூக்கம், விசித்திரமான செயல்பாடுகளால் அதிச்சி அடைந்த புர்காராமின் மனைவி, அவரை அழைத்துக்கொண்டு மருத்துமனைக்குச் சென்றுள்ளனர். அவர் சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக புர்காராமுக்கு என்ன பிரச்சினை என்பதை அறிய முழு பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனை முடிவில், அவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா (Axis Hypersomnia) எனும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கத்தில் இருந்து எழ முயற்சி செய்தாலும், அவர்களின் உடல் ஒத்துழைக்காது. மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாக, கடும் தலைவலியால் அவதிக்குள்ளாவார். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புர்காராம் இப்படி நாட்கணக்கில் தூங்குவதெல்லாம் இந்த ஆண்டோ, சென்ற ஆண்டு நிகழ்ந்ததோ அல்ல. சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்படி கட்டுப்பாடில்லாமல் மெய்மறந்து தூங்கும் புர்காராம், உணவு உண்பதெல்லாமே தூக்கத்தில் தானாம்.

இப்படியாக, புர்காராமின் தூக்கத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வரும் மனைவி மற்றும் தாயார், “புர்காராமுக்கு இருப்பது குணப்படுத்தமுடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னாலும், அவர் குணமடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என உறுதியாக நம்புகின்றனர்.

ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 14 ஜூலை 2021