மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

சிறுமி மித்ரா : மருந்து மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

சிறுமி மித்ரா : மருந்து மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

சிறுமி மித்ராவின் சிகிச்சை மருந்துக்கான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரத்து செய்து அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி என்ற தம்பதியின் மகள் மித்ரா. இரண்டு வயதான சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு முதுகுத் தண்டுவடம் சிதைவு நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

இந்த நோயினால் சிறுமி மித்ராவால் மூச்சு விடவும், உணவை விழுங்கவும் முடியாது. அதோடு தானாக குனியவோ, நிமிரவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாது. இதனால் சிறுமி மிகவும் அவதிபட்டு வந்தார்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கு ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் சோல்ஜென்ஸ்மா என்ற மருந்தை வாங்க வேண்டும். அதின் விலை 16 கோடி ரூபாய். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை இரண்டு வயதாகும் முன்பு இந்த மருந்து செலுத்தினால் மட்டுமே குணமடைய வைக்க முடியும் என்றும் கூறினர்.

இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது என்று தெரியாமல் சிறுமியின் பெற்றோர் திகைத்து நின்றனர். இந்த சூழ்நிலையில், சிறுமியின் நிலை அறிந்த பொதுமக்கள், நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் நிதியுதவி அளித்ததன் மூலம், மருந்து வாங்க தேவையான ரூ.16 கோடி திரட்டப்பட்டது.

மருந்துக்கான தொகை கிடைத்தாலும், அம்மருந்தை இறக்குமதி செய்வதற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் மட்டுமே மருந்து கிடைக்கும் என்பதால்,சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர வரிகளுக்கு விலக்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுபோன்று பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்த நிலையில், சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து அறிவித்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதன்மூலம் விரைவில் மித்ராவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில், “சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 14 ஜூலை 2021