மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றம் வேதனை!

இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றம் வேதனை!

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், “அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதைப் பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று (ஜூலை 14) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அமைக்கும் சாலைகள், ஆறு மாதங்கள் கூட நீடிப்பதில்லை. இதை அதிகாரிகள் ஆய்வும் செய்வதில்லை என்று தெரிவித்தார்.

சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது. குடிமக்கள்தான் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,

”சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, முழுமையான அடிப்படைக் கல்வி வழங்கப்படவில்லை. இன்னும் நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆஃப்' நிலையிலேயே இருக்கிறது” என்று வேதனை தெரிவித்தனர்.

இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளது. அவற்றை அமல்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 14 ஜூலை 2021