மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

திருப்பதி: ஆகஸ்ட் மாத தரிசனம் ஜூலை 20-ல் பதிவு!

திருப்பதி: ஆகஸ்ட் மாத தரிசனம் ஜூலை 20-ல் பதிவு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வரும் ஜூலை 20ஆம் தேதி காலை 9 மணி முதல் இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வரும் ஜூலை 20ஆம் தேதி காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக திருமணம் செய்யும் தம்பதியரை ஏழுமலையான் ஆசீர்வதிக்கும் வகையில், திருமண பத்திரிகையை அனுப்பினால், புதுமண தம்பதியர் கைகளில் கட்டிக்கொள்ள கங்கணம், மஞ்சள், குங்குமம், திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகம் ஆகியவற்றை அஞ்சல் மூலமாக தேவஸ்தானம் அனுப்பும்.

கொரோனா பரவலால் இத்திட்டம் கடந்தாண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமண பத்திரிகைகளை, ‘Sri Lord Venkateswara swamy, The Executive Officer, TTD Administrative Building, K.T.Road, Tirupati-517 501’ என்ற முகவரிக்கு அனுப்பும்படி தேவஸ்தானம் கூறியுள்ளது.

ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 13 ஜூலை 2021