மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ கீர்!

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ கீர்!

உலகில் வேறெந்த பழத்தையும்விட, மாம்பழமே மிக அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. தற்போது மலிவான விலையில் தரமான பழங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அதைக்கொண்டு செய்யப்பட்டும் இந்த மாம்பழ கீர் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

எப்படிச் செய்வது?

இனிப்பான பெரிய மாம்பழங்கள் இரண்டை தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பாதியளவு மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி, பாதி அளவாக குறையும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க், அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் அரைத்த மாம்பழ விழுது, மீதியுள்ள மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்துக் கலக்கவும். இதை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

சிறப்பு

மாம்பழத்திலுள்ள வைட்டமின் சத்துகளின் அளவானது, அதன் வகை மற்றும் கனியும் காலத்தைப் பொறுத்தே மாறுபடுகிறது. ஒரு கப் மாம்பழத் துண்டுகளில் 100 கலோரி ஆற்றல் உள்ளது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 13 ஜூலை 2021