மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: மாம்பழப் பச்சடி

கிச்சன் கீர்த்தனா: மாம்பழப் பச்சடி

அல்போன்சா, பங்கனபள்ளி, காசா, செந்தூரம், மனோரஞ்சிதம், ருமேனியா போன்றவை குறைந்த அளவிலான புளிப்பும் அதிக இனிப்பும் கொண்டவை. நார் மாம்பழம், காசா, காளையபாடி போன்றவற்றில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் இருக்கும். கல்லா, நாட்டுக்காய், கிளிமூக்கு மாம்பழம் போன்றவை அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும். நம்மூரில் கிடைக்கும் வகை எந்த மாம்பழத்திலும் இந்த மாம்பழப் பச்சடி செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

பழுத்த மாம்பழம் - 2

பொடித்த வெல்லம் - அரை கப்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சிறிய பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று

கடுகு - கால் டீஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

அரைத்த தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மாம்பழத்தைக் கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர்விட்டு, மாம்பழத்துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பச்சடியுடன் சேர்த்துக் கலக்கவும்.

நேற்றைய ரெசிப்பி : மாம்பழ மோர்க்குழம்பு!

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

செவ்வாய் 13 ஜூலை 2021