மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

கைதி மகனின் கல்லூரி கட்டணம்: உதவிய சிறை அதிகாரி!

கைதி மகனின் கல்லூரி கட்டணம்: உதவிய சிறை அதிகாரி!

வேலூர் சிறை கண்காணிப்பாளர் கோரிக்கையை ஏற்று ஆயுள் தண்டனை கைதியின் மகனுக்கு கல்லூரி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் நலன் பாதுகாக்க, அவர்களின் குறைகள் சிறை நன்னடத்தை அலுவலர் மூலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. இதில் கைதிகளின் தகுதிவாய்ந்த குறைகள் மீது சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன், குற்ற வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறை நன்னடத்தை அலுவலர் மோகன் கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் கிருஷ்ணன், “என்னுடைய மகன் கல்லூரி படிப்புக்குப் பணம் செலுத்த முடியாததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். அவன் தொடர்ந்து பயில உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து சிறை நன்னடத்தை அலுவலர், கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணனின் நிலை குறித்து அறிந்து அவரது மகனின் படிப்புக்கு உரிய உதவிகள் மேற்கொள்ள கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து கிருஷ்ணனின் மகனின் கல்லூரி மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்களை சேகரித்தார். அதில் அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்ஸி (டயாலிஸிஸ் டெக்னாலஜி) படிப்பை முதலாமாண்டு முடித்துவிட்டு கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு மாணவனின் படிப்பைத் தொடர உதவ வேண்டுமென கோரிக்கை கடிதம் ஒன்றை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த மாணவரின் இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மொத்தம் ரூபாய் 1.80 லட்சத்தை ரத்து செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 12 ஜூலை 2021