�டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

public

டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிற நிலையில், அண்டை மாநிலத்தில் ஜிகா வைரஸ், டெங்கு போன்ற நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் நோய் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு பரவலை தடுக்க கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 12) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், டெங்குவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது. மழை காலம் என்பதால் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், அந்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *