மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.41 லட்சம் வசூல்!

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.41 லட்சம் வசூல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் இதுவரை ரூ.41 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில்வே வாரியம் கடந்த ஏப்ரல் மாதம், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மண்டல ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்க, ரயில் நிலையங்களின் தூய்மையை பாதிக்கும் நடவடிக்கை விதிகளின்படி அதிகாரம் வழங்கியது.

அந்தவகையில் தெற்கு ரயில்வேக்குட்பட்ட அனைத்து ரயில்வே கோட்டங்களிலும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் தணிந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமக்களும் பயமின்றி முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார்கள் அதிகளவில் வந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினர், முகக்கவசம் அணியாமல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். தெற்கு ரயில்வேயில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கடந்த 9ஆம் தேதி வரை முகக்கவசம் அணியாத 8,265 நபர்களிடம் ரூ.40 லட்சத்து 92, 500 அபராதம் வசூலிக்கப்பட்டு, இலவச முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 12 ஜூலை 2021