மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

விதிமீறல் கட்டடங்கள்: வரன்முறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

விதிமீறல் கட்டடங்கள்: வரன்முறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும்,தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நகர் ஊரமைப்பு இயக்ககமும் கட்டடத்துக்கான திட்ட அனுமதியை வழங்கி வருகின்றன. இருப்பினும், பல்வேறு இடங்களில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான சட்டத்தை 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இயற்றியது.

அதன்படி, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரன்முறைபடுத்துவதற்கு அரசின் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. கட்டடங்களை வரன்முறைப்படுத்த வேண்டுவோர், வழக்கமான வளர்ச்சிக் கட்டணம், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டுக் கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், திறந்தவெளிப் பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 12)உத்தரவு பிறப்பித்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 12 ஜூலை 2021