மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

இனி இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

இனி இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

மெட்ரோ ரயில்கள் ஜூலை 12 ஆம் தேதி முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 19ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதில் கடைகள் கூடுதல் நேரம் இயங்கவும், மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரும் திங்கட்கிழமை (ஜூலை 12) முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணிவரை ரயில்கள் இயக்கப்படும்.

நெரிசல்மிகு நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இதுவரை 40 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூபாய் 8,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 11 ஜூலை 2021