மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

காற்றை பிடுங்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20,000 அபராதம்!

காற்றை பிடுங்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20,000 அபராதம்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் டாக்டர் காரின் டயரில் காற்றைத் திறந்துவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து குழித்துறை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குமரி மாவட்டம் அருமனை நெடியசாலை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெயின். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். அத்துடன் தினமும் மாலையில் அருமனை சந்திப்பில் ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்வது வழக்கம்.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் அருமனை சந்திப்பில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்றார். அங்கு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அருமனை சந்திப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார், போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருப்பதாக கூறி டாக்டர் காரின் டயரில் காற்றை திறந்துவிட்டு சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையறிந்த டாக்டர் ஜெயின், தான் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி காரை நிறுத்தியிருந்ததாக உயரதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது வழக்கை விசாரித்த குழித்துறை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி தர்மபிரபு தீர்ப்பு அளித்தார்.

அந்தத் தீர்ப்பில் டாக்டரின் காரை சேதப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமாருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றச் செலவாக ரூ.8,439-ஐ பாதிக்கப்பட்ட டாக்டருக்கு வழங்க வேண்டுமென்றும், இந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் டாக்டருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

ஞாயிறு 11 ஜூலை 2021